திருப்பூர்

தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவி: மாவட்ட ஆட்சியர் தகவல்

குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

DIN

குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த, தொழில் செய்திட பல்வேறு திட்டங்களின் கீழ் குறைந்த வட்டியின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் உதவி பெற, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ. 1.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம். மேற்படி திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பித்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

"நான் சொல்லி செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாரா?” TTV தினகரன் பதில் | TVK | ADMK

பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்: நடிகர் திலீப்

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு! நடிகை தரப்பு

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

SCROLL FOR NEXT