முகப்பு
திருப்பூர்

காவல்துறைக்கு தேர்வான ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டு

தமிழக காவல் துறையில் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்ட  உடுமலையைச் சேர்ந்த 2 ஹாக்கி வீரர்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர்

காவல்துறைக்கு தேர்வான ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டு

தமிழக காவல் துறையில் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்ட  உடுமலையைச் சேர்ந்த 2 ஹாக்கி வீரர்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தமிழக காவல் துறையில் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்ட  உடுமலையைச் சேர்ந்த 2 ஹாக்கி வீரர்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லூரியில் படித்த ஹாக்கி வீரர்களான உடுமலையைச் சேர்ந்த எம்.காளிமுத்து,  எம்.ரமேஷ் ஆகிய இருவரும் தமிழக காவல் துறையில் காவலர் பணிக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்,  இந்த இருவருக்கும் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில்,  இந்தியா ஹாக்கி அணிக்காக விளையாடி, தற்போது தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வரும் உடுமலையைச் சேர்ந்த கணேஷ் பாண்டியன்,  இந்த இருவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இதில், மூத்த ஹாக்கி வீரர்கள் அருண்பாண்டியன், வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லூரி உடற்பயிற்சி இயக்குநர் ஜெ.சண்முகராஜா, ஹாக்கி பயிற்சியாளர் ராஜா,  ஹாக்கி வீரர்கள்,  வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →