கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்
பல்லடம் புளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் புளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மகா சுதர்ஸன ஹோமம், விஷ்வச்சேனர் ஆராதனை, யாக வேள்வி, சுப்ரபாத சேவை, மகா கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
புத்தரச்சல் தேவி,பூதேவி ஸமேத சீனிவாசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் அஜய் பிரசன்ன சுவாமி இதை நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்களை பள்ளித் தாளாளர் ராமசாமி, முதல்வர் ஹேமலதா ஆகியோர் வரவேற்றனர். பள்ளி குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.