தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் முகாம்
தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது
தாராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமை ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் பி.செல்வகுமார சின்னையன் துவக்கிவைத்தார். முகாமில் தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 700 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை திருப்பூர் சஷம் மற்றும் பாரதிய வித்யாஷ்ரமம் சிறப்பு பள்ளி ஆகியவை ஒருங்கிணைத்தன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் தலைமையில் முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.