பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்ட முகாம்
மூலனூர் அருகே பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூர்பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்ட முகாம்
மூலனூர் அருகே பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மூலனூர் அருகே பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நஞ்சைதலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் மாரிமுத்து, துணை அலுவலர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு அல்லது மகசூல் இழப்பு ஏற்படும் சமயத்தில் விவசாயிகள் தங்களைப் பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் குமார், கோபியைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.