முகப்பு
திருப்பூர்

பில்டர்ஸ் அசோசியேஷன் பொதுக் குழுக் கூட்டம்

பில்டர்ஸ் அஸோசியேஷன் ஆஃப் இந்தியாவின் 3-ஆவது மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் நடைபெற்றது.

திருப்பூர்

பில்டர்ஸ் அசோசியேஷன் பொதுக் குழுக் கூட்டம்

பில்டர்ஸ் அஸோசியேஷன் ஆஃப் இந்தியாவின் 3-ஆவது மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பில்டர்ஸ் அஸோசியேஷன் ஆஃப் இந்தியாவின் 3-ஆவது மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் நடைபெற்றது.
நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு,  பில்டர்ஸ் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் ஈரோடு பகுதி துணைத் தலைவர் பி.பாலசிவகுமார், ஈரோடு கட்டுனர் அறக்கட்டளை தலைவர் வி.சத்யமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அந்த அமைப்பின் தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாத் மாநிலத் தலைவர், ஜி.வேதா ஆனந்த்,  மாநிலச் செயலாளர் எஸ்.அய்யநாதன்,  மாநிலப் பொருளாளர் ஓ.கே.செல்வராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் எம்.திருசங்கு,  தென்னிந்திய துணைத் தலைவர், வி.என்.வி.வரதராஜன்,  ஈரோடு பகுதியின் செயலாளர் கே.ஆர்.தனசேகர்,  புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் எல்.கார்த்திகேயன் உள்ளிட்ட 200-க்கும்  மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை டீன் ஏ.ஜி.வி.நாராயணன் மேற்பார்வையில் கட்டுமானத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →