திருப்பூர்

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

DIN

பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்.
இதுகுறித்து காங்கயம் வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பெ.சித்தார்த்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டாரத்துக்கு  தோட்டக்கலைத் துறை மூலம்  பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டத்தின் (2017-18)  கீழ் விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 73 ஹெக்டேர் பொருள் இலக்கும், ரூ. 44 லட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம்  அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகின்றன. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் (12.5 ஏக்கர்) வரை மானியம் அளிக்கப்படும். சென்னையில் உள்ள டேன்ஹோடா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர்ப் பாசன நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்து, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், இந்த மானியத்தைப் பெறுவதற்கு, விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று, சிட்டா-அடங்கல்,  வயல் வரைபடம், குடும்ப அட்டை நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண்- நீர் ஆய்வுச் சான்று, சிறு-குறு விவசாயி சான்று ஆகியவற்றை இணைத்து காங்கயம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT