திருப்பூர்

"உயர்த்தப்பட்ட வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்'

DIN

வெள்ளக்கோவில் நகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, குடிநீர்க் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் இ.ஷாஜகானிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
நகராட்சிப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகிகப்படவில்லை. குடிநீர் வழங்காத காலங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. நகர்மன்றத் தீர்மானம் மூலமாக ஆண்டுக் குடிநீர்க் கட்டணம் ரூ. 780 என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ரூ. 1,560-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பழுதடைந்த குடிநீர் இணைப்புகள் ஒப்பந்ததாரர் மூலமாக சீரமைக்கப்படுவதால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க நகராட்சி மூலமாகவே பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல, பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரியையும் ரத்து செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT