திருப்பூர்

திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பனியன் நிறுவனத் தொழிலாளி கைது

DIN

நள்ளிரவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பனியன் நிறுவனத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், அங்கேரிபாளையம் சாலையில், தனியார் மேல்நிலைப் பள்ளியையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் அந்த வழியாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த  ஏ.டி.எம். மையத்தில் இருந்து சப்தம் கேட்டுள்ளது. நவீன்குமார் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் கடப்பாரையால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து,  பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர், தூத்துக்குடி பால் பண்ணை பங்களா தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவசங்கரன் (35) என்பதும், திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே தங்கி அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் மதுபோதையில் கடப்பாறைரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கொள்ளை முயற்சியில், ஏ.டி.எம். இயந்திரத்தின் கதவு மட்டும் சேதமடைந்துள்ளது. மேலும், கொள்ளை முயற்சி நடந்தபோது அங்கு இரவுக் காவலாளி இல்லை என்பதும் தெரியவந்தது.  
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் ஊத்துக்குளி சாலை கிளை மேலாளர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT