முகப்பு
திருப்பூர்

இளைஞர் கொலை வழக்கு:  2 பேர் கைது

திருப்பூரில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது  செய்தனர். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:19 AM
பகிர்:

திருப்பூரில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது  செய்தனர். 
திருப்பூர், மங்கலம் சாலை, பாரதி நகர் பகுதியிலுள்ள முள்புதரில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (24) என்பவர் கழுத்தறுத்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
இந்நிலையில் இக்கொலை தொடர்பாக  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்,பெருமாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி நளினி என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவரும்  வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூர் பாரதி நகர் பகுதியில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையறிந்த நளினியின் கணவர் முருகன், அவரது உறவினர் பெருமாள் ஆகியோர்  திருப்பூர் வந்து நளினியை திருமணம் செய்து வைப்பதாக கூறி லோகநாதனை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து,  திருப்பூர் கோவில் வழி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,  முருகன், பெருமாள் ஆகியோரை பிடித்தனர். இதைத் தொடர்ந்து  முருகன்(எ) முருகானந்தம்,  பெருமாள் ஆகியோரை தெற்கு போலீஸார் கைது செய்தனர் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.