முகப்பு
திருப்பூர்

தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263-ஆவது பிறந்த தினத்தையொட்டி,  காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:40 am IST
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263-ஆவது பிறந்த தினத்தையொட்டி,  காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தீரன் சின்னமலை பிறந்த ஊரான காங்கயம் தாலுகா,  பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு  நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில்,  அக்கட்சியின் துணைச் செயலர் கே.யுவராஜ்குமார், அவைத் தலைவர் முருகசாமி, தலைமை நிலையச் செயலர் பொன்.முருகேஷ்,  மாநில அமைப்பாளர் சண்முகம், பாமக துணைத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.