ஒடிஸா பெண் தூக்கிட்டுச் சாவு
அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்த ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்த ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிஸா மாநிலம், பன்சடா பகுதியைச் சேர்ந்த ரத்தனர்கார் மகள் சுனில்லதாசெட்டி (22). இவர் அவிநாசியை அடுத்துள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தின் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை பணி முடிந்து அறைக்குத் திரும்பியவர் வெளியே வரவில்லை. சந்கேமடைந்தவர்கள் பார்த்தபோது, அறையை
தாழிட்டுவிட்டு உள்ளே சுனில்லதாசெட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.