முகப்பு
திருப்பூர்

அத்திக்கடவுத் திட்ட போராட்டம் ரத்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததையடுத்து, அவிநாசியில் பிப்ரவரி8-ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததையடுத்து, அவிநாசியில் பிப்ரவரி8-ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
 அத்திக்கடவு -அவிநாசி திட்டபோராட்டக் குழு கூட்டமைப்பு சார்பில்  ஆலோசனைக் கூட்டம்  அவிநாசி சேவூர் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டக் குழுவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அறிவித்த ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கினர். பிறகு, பல்லடத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் கே.பழனிசாமி 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் திட்டம் தொடங்கப்பட்டு 30 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து போராட்டக் குழுவினர் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால்,  பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். 
இதற்கிடையில் போராட்டக் குழுவினர், கடந்த ஜனவரி 31-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்தனர். 
இதில் அத்திக்கடவுத் திட்டத்துக்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளும் பயனடையும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் சூரியஒளி மின்சாரம் மூலம் நீரேற்றி இத் திட்டத்துக்கான முழுத் தொகையை தமிழக அரசே ஏற்று நிறைவேற்றும் என உறுதியளித்தனர். இதையடுத்து பிப்ரவரி 8-ஆம் தேதி அவிநாசியில் நடைபெற இருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்துவது என முடிவு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →