243 மூட்டைகள் கொப்பரை ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை 243 மூட்டைகள் தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை 243 மூட்டைகள் தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் 34 விவசாயிகள் வந்திருந்தனர். காங்கயம், முத்தூர், கொடுமுடியிலிருந்து 10 வணிகர்கள் வந்திருந்தனர்.
மொத்த வரத்து 12,642 கிலோ. அதிகபட்சமாக கிலோ ரூ. 137.05, குறைந்தபட்ச விலை ரூ. 65.65 என ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ. 110.55.
விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் விற்பனை நடைபெற்றது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 13.16 லட்சம் விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.