திருப்பூர்

சத்யம் இன்டர்நேஷனல்  பள்ளியில் பொங்கல் விழா

DIN

வெள்ளக்கோவில் சத்யம் இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, தமிழர் கலாசாரம், பொங்கல் பண்டிகை குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மாடுகளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், காங்கயம் இன மாடுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
 பின்னர் மாடுகளை வழிபட்டு, பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.  விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.
இந்த விழாவில் பள்ளித் தலைவர் கே.ஆர்.சின்னசாமி, தாளாளர் எஸ்.ரகுநாதன், பொருளாளர் எஸ்.பி.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சி.பரமேஸ்வரி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT