திருப்பூர்

சைனிக் பள்ளியில் 56-வது ஆண்டு விழா

DIN

உடுமலையை அடுத்த அமராவதி நகரிலுள்ள சைனிக் பள்ளியின் 56-வது ஆண்டு விழாவும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவுபசார விழாவும் சனிக்கிழமை நடைபெற்றன.
பள்ளி முதல்வர் டி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். முதலில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோவை ஐஎன்எஸ் அக்ராணி (கப்பல் படை பிரிவு) கமாண்டிங் அதிகாரி கமோடர் ராஜீவ் சௌத்ரி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து தடகளம், கல்வி, ஒழுக்கம், ஒட்டுமொத்த சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை அவர் வழங்கினார்.
கல்வி, விளையாட்டு, இல்ல ஒழுங்கு, சமூக சேவை ஆகிய அம்சங்களில் சிறப்பான தேர்ச்சி பெற்ற பல்லவர் இல்லத்துக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. பள்ளியின் நிர்வாக அலுவலர் பிரசாந்த் போர்டே, துணை முதல்வர் கட்டபொம்மன், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT