முகப்பு
திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக கு.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக கு.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த கு.பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று  உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த க.சித்ரா கோவை அரசுக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற கு.பாலகிருஷ்ணனுக்கு கல்லூரி ஆட்சிக் குழுவினர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.  கு.பாலகிருஷ்ணன் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராக கடந்த முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 
இரண்டாம் நிலைக் கல்லூரியான குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று முதல்நிலைக் கல்லூரியான உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.