திருப்பூர்

அவிநாசி புதிய பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு

DIN

அவிநாசி புதிய பேருந்து நிலையத்துக்குள் வராத தனியார் பேருந்துகளைப் பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் கோவையில் இருந்து ஈரோடு, சேலம் செல்வதற்கு அனைத்து இடை நில்லாப்பேருந்துகளும் அவிநாசி நகரத்துக்குள் செல்லாமல் புறவழிச்சாலையிலேயே சென்று வருகின்றன.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த பல நாள்களாக திருப்பூரில் இருந்து கோவைக்கு, அவிநாசிக்கு வராமல், அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை வழியாக செல்லும் பேருந்துகளை பொது மக்கள் தடுத்து இந்த வழியாக செல்லக்கூடாது அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், இந்நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அவிநாசி புதிய பேருந்து நிலையத்துக்குள் வராமல் புறவழிச் சாலையில் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளை பொது மக்கள் சிறைபிடித்தனர்.
அங்குவந்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியும் பேருந்துகளின் நடத்துநர், ஓட்டுநரை எச்சரித்து, இனி அவிநாசி புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்துதான் செல்லவேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், அந்த இரண்டு தனியார் பேருந்துகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT