முகப்பு
திருப்பூர்

அவிநாசி வாரச் சந்தையில் எடை அளவுத் துறையினர் ஆய்வு

அவிநாசி சந்தைப்பேட்டையில் எடை அளவுத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அவிநாசி சந்தைப்பேட்டையில் எடை அளவுத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி, ஈரோடு சாலையில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம்.  இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,  புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சட்டமுறை எடை அளவுத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 6 வியாபாரிகள் எடை இயந்திரத்துக்கு உரிய முத்திரை இடமால் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து எடை அளவுத் துறையினர் முத்திரையிடாத 6 எடை இயந்திரங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். 
மேலும், வியாபாரிகளுக்கு முத்திரையிடுதல் குறித்து அறிவுறுத்திச் சென்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →