அவிநாசியில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 3,350 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,500 முதல் ரூ. 5,455 வரையிலும், டி.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,500 முதல் ரூ. 6,400 வரையிலும் , மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 50 லட்சத்துக்கு வர்த்தகம்
நடைபெற்றது.