கள் இறக்கி விற்பனை: 2 பேர் கைது
வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரசோழபுரம் அருகேயுள்ள பொன்பரப்பியில் ஜெயபாலன் (64) என்ற விவசாயிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 15 தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயபாலன் மற்றும் கள் இறக்கிய மரமேறும் தொழிலாளி குருக்குப்பனையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.