வன விலங்கு கணக்கெடுப்பு
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த இரு வனச் சரகங்களில் மே 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இதற்காக உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியர், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு இந்தப் பணிகளை கவனிப்பர்.
ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பணிகள் நடைபெற உள்ளன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.