முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் ஒன்றிய வளாகத்தில் திறந்தவெளிக் கிணறுக்கு கம்பிவலை அமைக்கப்படுமா?

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பராமரிப்பின்றி திறந்தவெளிக் கிணறு உள்ளது. இதற்கு பாதுகாப்பான கம்பிவலை அமைக்க வேண்டும் என்று

Updated On : 13 நவம்பர், 2018 at 3:48 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பராமரிப்பின்றி திறந்தவெளிக் கிணறு உள்ளது. இதற்கு பாதுகாப்பான கம்பிவலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளக்கோவில், கரூர் சாலையில், காவல் நிலையம் எதிரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் சுமார் 60 அடி ஆழமுள்ள திறந்தவெளிக் கிணறு உள்ளது.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கிராம நிர்வாக அலுவலகம், நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் திறந்தவெளிக் கிணற்றின் அருகில் செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதன் தண்ணீரை ஒன்றிய அலுவலகக் கழிவறைக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கிணற்றில் இருக்கும் சிறிதளவு தண்ணீரில் குப்பை கூளங்கள் அசுத்தமாக மிதக்கின்றன. இதனால் கொசுக்கள் பெருகுகின்றன. கிணற்றின் சுவரில் ஒரு மரமும் வளர்ந்துள்ளது.
இந்தக் கிணற்றைச் சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், பாதுகாப்புக் கம்பி வலை அமைக்கவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.