56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!
ரியல்மி நிறுவனத்தில் இருந்து 56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ அறிமுகமாகியுள்ளதைப் பற்றி...
ரியல்மி நிறுவனத்தில் இருந்து 56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ அறிமுகமாகியுள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள ரெட் மி மற்றும் ரியல்மி மொபைல்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர்.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பட்ஸ் டி500 புரோ ஏர்பட்ஸ்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. ரியல்மி பட்ஸ் மாடல்களை விட இந்த இயர்போன்கள் எடை குறைவாகவும், இதன் கேஸ் மிகவும் கச்சிதமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தியாவில் ரியல்மி பட்ஸ் டி500 புரோவின் விலை ரூ. 2,799 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களை ஏப்.23 முதல் அமேசான், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் வழியாக சாக்லேட், லெமன் கோலா மற்றும் ஆரஞ்சு மின்ட் ஆகிய வண்ணங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
ஏப். 23 முதல் ஏப். 26 ஆம் தேதி வரை நடைபெறும் முதல் விற்பனைச் சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 200 தள்ளுபடியுடன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயர் பட்ஸ்கள் தண்ணீர் மற்றும் தூசு படாத வகையில், ஐபி55 மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு இயர் பட்ஸும் சுமார் 4.5 கிராம் எடையைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு இயர் பட்ஸிலும் 62 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இயர் பட்ஸ் கேஸில் 530mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இயர் பட்ஸ்களை சார்ஜ் செய்வதற்கு ஒரு மணி நேரமும், இயர் பட்ஸ் கேஸை சார்ஜ் செய்வதற்கு இரண்டு மணி நேரமும் ஆகுமென நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Realme Buds T500 Pro TWS earphones were launched in India on Thursday. They are equipped with 12.4mm drivers, and support for the LHDC 5.0 codec and Hi-Res Audio Wireless.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.