உலகம் பலவிதம்
அமெரிக்காவுக்குத் தெற்கே மெக்சிகோ அருகே உள்ள நாடு குவாதேமாலா. மாயன் கலாசாரம் நிலவிய பகுதி.
8 மணி நேர மரணம்
அமெரிக்காவுக்குத் தெற்கே மெக்சிகோ அருகே உள்ள நாடு குவாதேமாலா. மாயன் கலாசாரம் நிலவிய பகுதி. இந்த நாட்டைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி யுலெய்டி.
வீட்டில் வழக்கமாக நடந்துகொண்டிருந்த பெண் திடீரென மயக்கமடைந்தாள். மூச்சுப்பேச்சு இல்லை. சிறுமி இறந்துவிட்டதாக தந்தை நினைத்தார். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. சவப்பெட்டியில் சிறுமியை வைத்து மூடினர்.
Advertisement
Advertisement
சம்பவம் நடந்த 8 மணி நேரத்துக்குப் பின்னர் சவப்பெட்டி அசைந்தது. திறந்து பார்த்தனர். சிறுமி உயிருடன் இருந்தாள். இந்தக் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாயின.
ஸ்மார்ட்போன் உயிர் காக்கும்
ரஷியாவில் சைபீரியா பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒரு பனிக் காட்டில் தனியாக இருந்தான். ஒரு கரடி அவனைத் துரத்தியது. ஒரு மரத்தில் ஏறினான்.
கரடியும் மரத்தில் ஏறிய அவனைக் கீழே இழுத்தது. இந்தப் போராட்டத்தில் சிறுவன் கையில் இருந்த ஸ்மார்ட்போன் கரடியின் வாயில் சிக்கியது. கையைக் கடித்தபோது செல்போனையும் கரடி கடித்தது.
செல்போன் பேட்டரி வெடித்ததில், சிறுவனுக்கும் கரடிக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால், கரடி பயந்து ஓடிவிட்டது. உயிர்க்காப்பு எப்படி அமையும் என்பதைக் கணிக்கமுடியாது.
45 நாள்கள் போதும்...
காணாமல் போனவர்களை இறந்தவர்களாகக் கருதவேண்டும் என்றால் 12 ஆண்டுகளுக்குப் பிறகே சாத்தியம்.
பன்னிரண்டு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் அவரை இறந்த நபராகக் கருதலாம். ஆனால், போலீஸ் சான்றிதழ் தேவை. அது இருந்தால்தான் காணாமல் போன நபரின் சொத்துகள், பெயர் மாற்றம் அல்லது அரசுப் பலன்களைப் பெறமுடியும்.
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 5000 பேரைக் காணவில்லை. இதையடுத்து, காணாமல் போனவர்களை இறந்தவர்களாகச் சான்று அளிக்கும் கால இடைவெளியை 12 ஆண்டுகளில் இருந்து 45 நாள்களாகக் குறைத்து ஆணை வெளியிட்டுள்ளது நேபாள அரசு.
28 ஆண்டுகள் நடந்து ...
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கார்ல் புஷ்பி (57), ராணுவத்தில் பாராசூட் வீரராகப் பணியாற்றியவர். சாகசப் பிரியர்.
ராணுவத்தில் இருந்து விலகியதும், இந்த உலகை நடந்தே சுற்றிப்பார்ப்பது என்று முடிவு செய்தார்.
1998-இல் தொடங்கிய நடைப்பயணம் அவரது சொந்த ஊருக்குத் திரும்பி வர 25 ஆண்டுகள் ஆயிற்று.
சுமார் 50,000 கிலோ மீட்டர் நடந்துள்ளார். 'எந்தச் சந்தர்ப்பத்திலும் வாகனத்தைப் பயன்படுத்தவில்லை' என்கிறார்.
ஆர்.எஸ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.