FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீதிக் கதைகள்! தேவையற்றதை நீக்குவதே படைப்பாற்றல்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

நீதிக் கதைகள்! தேவையற்றதை நீக்குவதே படைப்பாற்றல்! - படம்: சிறுவர் மணி
பகிர்:

உண்மையான படைப்பாற்றல் எது என்று தன் மாணவர்களுக்கு உணர்த்த விரும்பினார் அந்தப் பேராசிரியர்.

தனது மாணவர்கள் முப்பது பேரை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பாதையின் நடுவே போவதற்கு இடையூறாகக் கிடந்த பாறாங்கல் ஒன்றைக் காட்டினர்.

"இந்தக் கல் இங்கே கிடப்பது இடையூறாக இருக்கிறது. இதை அழிப்பதற்கு என்ன வழி? நாளை வகுப்புக்கு வரும்பொழுது உங்களுக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டு வாருங்கள்" என்றார் பேராசிரியர்.

Advertisement

Advertisement

இருபது பேர் ஒரு சம்மட்டி கொண்டு பாறாங்கல்லை அடித்து நொறுக்கி அழித்துவிடலாம் என்று எழுதியிருந்தனர். மேலும் ஒன்பது பேர், "பாறாங்கல் அருகே ஒரு பெரிய குழியைத் தோண்டி, பாறாங்கல்லை அந்தக் குழியினுள் தள்ளி மூடிவிட்டால் பாறாங்கல் மறைந்துவிடும்" என்று எழுதியிருந்தனர்.

ஒரு மாணவர் மட்டும், "ஒரு சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு அந்தக் கல்லில் இருக்கும் தேவையற்ற பகுதிகளைச் செதுக்கி எறிந்துவிடுவேன். பாறாங்கல் அழிந்துவிடும். அழகிய சிற்பம் ஒன்று அங்கே நிற்கும். தோட்டமும் அழகு பெறும். பார்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைவர்" என்று எழுதியிருந்தார்.

"படைப்பாற்றல் என்பது இருப்பதை அழிப்பதோ, மறைப்பதோ அன்று. தேவையற்றதை நீக்குவதே" என்று அந்த மாணவரைப் பாராட்டினார் ஆசிரியர்.

summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments