திருப்பூர்

கொசு பெருகக் காரணமான நூற்பாலைக்கு அபராதம்

DIN

வெள்ளக்கோவிலில் டெங்கு கொசு பெருக்கத்துக்குக் காரணமாக இருந்த நூற்பாலையின் உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ. 5,000 அபராதத்தை புதன்கிழமை விதித்தது. 
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், வீடுகள், கடைகளில் அதிகாரிகள் குழு நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
வெள்ளக்கோவில்- மூலனூர் சாலையிலுள்ள ஒரு தனியார் நூற்பாலையின் தண்ணீர்த் தொட்டியில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் அ.சங்கர் அந்த நூற்பாலையின் உரிமையாளருக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தார்.
இதேபோல அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கும் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT