திருப்பூர்

முத்தூர் விற்பனைக் கூடத்துக்கு  தேங்காய் வரத்து குறைந்தது

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு சனிக்கிழமை தேங்காய், கொப்பரை வரத்து மிகவும் குறைவாக இருந்தது.  
இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறும். கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் தேங்காய்களில் மட்டைகளை உரிக்க முடியாமலும், கொப்பரைரழை உலர்த்த முடியாததாலும் சனிக்கிழமையில் வரத்து 75 சதவீதம் குறைந்திருந்தது. 
இந்த வாரம் 4,107 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ ரூ.21.50, அதிகபட்சம் ரூ.26.65க்கு விற்பனையானது. சராசரி விலை ரூ.25.50. இதன் விற்பனைத் தொகை 38 ஆயிரத்து 207 ரூபாயாகும்.  
கொப்பரை 200 கிலோ வரத்து இருந்தது. கிலோ ரூ.75.00 முதல் ரூ.86.05 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ78.70. இதன் விற்பனைத் தொகை ரூ.15 ஆயிரத்து 600. விவசாயிகள் 13 பேரும், வியாபாரிகள் 3 பேரும் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
 விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.53 ஆயிரத்து 807 விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT