திருப்பூர்

வரத்து இல்லாததால் சூரியகாந்தி விதை ஏலம் ரத்து

DIN

வரத்து இல்லாததால் வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் ரத்து செய்யப்பட்டது.
 இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பகுதிகள் மற்றும் அருகில் உள்ள முத்தூர், மூலனூர் பகுதிகளில் அதிக அளவு சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டது.
 அப்போது வரத்து அதிக அளவில் இருந்த நிலையில், இப்பகுதியில் எண்ணெய் ஆலைகளும் இருப்பதால் வெள்ளக்கோவில் விற்பனைக் கூடம் சூரியகாந்தி விதை விற்பனைக்குப் பெயர் பெற்று விளங்கியது. 
 தற்போது, உள்ளூர் பகுதி விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறிவிட்டதாலும், வறட்சி காரணமாகவும் உள்ளூரில் வரத்து குறைந்துவிட்டது.
 இருப்பினும் திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து சூரியகாந்தி வரத்து இருந்ததால் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், வரத்து முற்றிலும் வரத்து இல்லாமல் போனதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
 சூரியகாந்தி விதை வரத்து தொடங்கியதும் மீண்டும் வழக்கம்போல விற்பனை நடைபெறும் என விற்பனைக்கூட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT