முகப்பு
திருப்பூர்

நூலகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள்

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண் 2க்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:37 AM
பகிர்:

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண் 2க்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நூலகத்தில் சதுரங்கம் மற்றும் சிலம்பப் பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், நூலகத்துக்கு எதிரில் உள்ள காலி இடம் சுத்தம் செய்யப்பட்டு விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நூலகத்துக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தனது சொந்தப் பொறுப்பில் வழங்கினார். நூலகர் வி.கணேசன் அவற்றைப் பெற்றுக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியில், நூலக வாசகர் வட்டப் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.