முகப்பு
திருப்பூர்

மாமனார் கொலை;  மருமகன் தலைமறைவு

ஊத்துக்குளி அருகே மாமனாரைக் கொலை செய்த மருமகன் தலைமறைவானார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:39 AM
பகிர்:

ஊத்துக்குளி அருகே மாமனாரைக் கொலை செய்த மருமகன் தலைமறைவானார்.
ஊத்துக்குளி அருகே உள்ள மோனக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (55). இவர், அதே பகுதியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மகள் வனிதா. இவரது கணவர் பாலசந்தர் (40). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வனிதாவும், பாலசந்தரும் மோனக்கவுண்டன்பாளையத்தில் தனியாக வசித்து வந்தனர். 
இந்நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தம்பதி இடையே சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனிடம் கூறியுள்ளார். 
இதையடுத்து, தனது மகள் வீட்டுக்குச் சென்ற சுந்தரேசன் மருமகன் பாலசந்தரைக் கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த பாலசந்தர், மாமனார் சுந்தரேசனைக் கத்தியால் குத்தினார். இதில்,  அவர் சம்பவத்தில் இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுந்தரேசனின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான பாலசந்தரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.