திருப்பூர்

வழுக்கு மரம்: கீழே விழுந்து இளைஞர் சாவு

DIN

சேவூர் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையத்தில் வழுக்கு மர விளையாட்டின்போது கீழே விழுந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு  செப்டம்பர்  3ஆம் தேதி இரவு சாவக்கட்டுப்பாளையம் கிராமத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. 
இதில், அப்பகுதியைச் சேர்ந்த  பூபதி மகன் அரங்கசாமி (25) வழுக்கு மரத்தில் ஏறினார். அப்போது உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அரங்கசாமி சுயநினைவின்றி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT