திருப்பூர்

பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ. 2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

DIN

பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
பல்லடம் தொகுதி பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர், கள்ளிபாளையம், வடமலைப்பாளையம், எலவந்தி, கேத்தனூர், தெற்கு அவிநாசிபாளையம், அலகுமலை, கண்டியன்கோயில், நாச்சிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் சிறுபாலம், அங்கன்வாடி மையக் கட்டடம், கான்கிரீட் தடுப்பணை, தார் சாலை, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நாச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும், கேத்தனூர் ஊராட்சியில்
ரூ. 54.95 லட்சம் மதிப்பில், குட்டைகளில் தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் மொத்தம் ரூ. 195.13 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இதில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பங்கேற்று பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இதில், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜீவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமார், வட்டாரப் பொறியாளர் மகாலட்சுமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாச்சலம், கேத்தனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.ஹரிகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT