திருப்பூர்

குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்

DIN

தாராபுரம் அருகே மடத்துப்பாளையத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பள்ளி தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா முன்னிலை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் மழை நீர் தேங்குமிடங்களான கண்மாய், குளம், ஊரணி, கிணறு, வீடுகள் தோண்டப்பட்ட குழிகளுக்கு செல்லாதவாறு பெற்றோர், ஆசிரியர்கள் பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் குற்றங்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை கடத்தல், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகளின் விவரம் சேகரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT