திருப்பூர்

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் கொண்டுவர ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

DIN

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாய்க்கன்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர்கொண்டு வருவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கிறது. அணைக்கு அருகில் அமராவதி ஆற்றில் வரும் உபரிநீரை மின் மோட்டார் வைத்து குழாய் மூலம் நீர் கொண்டுவரும் திட்டத்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 மற்றொரு திட்டமாக ரூ.255 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
 இவற்றில் ஏதாவதொரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற கடந்த 3 ஆண்டுகளாகப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
 இது குறித்து வட்டமலைக்கரை ஓடை அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் கே.பழனிசாமி கூறியதாவது:
 மேற்கண்ட தீர்மானத்தை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT