திருப்பூர்

அரசுக் கல்லூரி பேராசிரியை மீது மர்ம நபர்கள் தாக்குதல்

DIN

உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியை மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலாவியல் துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் சாந்தி மேரி (42). இவரது கணவர் எம்.மஞ்சினி. புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரைப் பார்க்க புதுச்சேரி செல்வதற்காக உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு சாந்தி மேரி தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வந்தார்.
அப்போது வழியில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரும்பினாலான ஆயுதத்தைக் கொண்டு சாந்தி மேரி முகத்தின் மீது வேகமாக வீசியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாந்திமேரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். 
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது முகத்தில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் சாந்தி மேரி மயக்கமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரை உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  
இதுகுறித்து தகவலறிந்த உடுமலை காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ், அரசு மருத்துவமனைக்கு வந்து சாந்தி மேரியிடம் விசாரணை நடத்தினார். 
அப்போது சாந்தி மேரி எழுத்துப்பூர்வமாக போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், தான் பணியாற்றும் அரசு கலைக் கல்லூரியில் தனது துறைத் தலைவர் பல்வேறு வகையில் தன்னைத் தொந்தரவு செய்து வந்ததாகவும், இது பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் செய்ததால் ஆத்திரத்தில் பழிவாங்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட உடுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT