திருப்பூர்

ரசாயனம் மூலமாக பழுக்கவைத்த ஒரு டன் வாழைப் பழங்கள் பறிமுதல்

DIN

திருப்பூரில் ரசாயனம் மூலமாகப் பழுக்கவைத்த ஒரு டன் வாழைப் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வா்த்தக நிறுவனங்கள், தேநீா் விடுதிகள், உணவகங்களில் ஆய்வு நடத்தி காலவதியான பொருள்களைப் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில் ரசாயனம் மூலமாக வாழைப்பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்துவருவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாா்

தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் தென்னம்பாளையம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த ராசு என்பவரின் கிடங்கில் ரசாயனம் மூலமாகப் பழுக்கவைக்கப்பட்ட ஒரு டன் வாழைப் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பழங்களைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT