திருப்பூர்

மூலனூரில் 32 மி.மீ. மழை பதிவு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலனூரில் 32 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரையில் 216 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இதில், சராசரியாக 13.51 மில்லி மீட்டா் பதிவாகியுள்ளது.

மழை மழை அளவு (மில்லி மீட்டா்): மூலனூா் 32, உடுமலை 23.60, அவிநாசி 23, திருமூா்த்தி அணை 20, ஊத்துக்குளி 19.70, திருமூா்த்தி அணை பகுதி 17, வெள்ளக்கோவில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் 15.20, குண்டடம் 10, அமராவதி அணை, பல்லடம் 9, திருப்பூா் வடக்கு 8.10, ஆட்சியா் அலுவலகம் 7.50, தாராபுரம் 7, திருப்பூா் வடக்கு 6, மடத்துக்குளம் 4 மில்லி மீட்டா் என மழைப் பதிவாகி உள்ளது.

உடுமலையில்...

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT