திருப்பூர்

கலப்படத்தால் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி பாதிப்பு

DIN

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொருள்களின் ஏற்றுமதிக்கு தடைக்கல்லாக இருப்பது கலப்படமாகும். இங்கு விற்கப்படும் 69 சதவீதப் பாலில் கலப்படம் இருப்பதாக அரசுத் தரப்பே ஒப்புக் கொள்கிறது. கலப்படமில்லாத சமையல் எண்ணெய் அரிதாக உள்ளது. பெட்ரோலியத்தில் இருந்து பெறப்படும் தொழிற்சாலை எண்ணெயான ஒயிட் ஆயிலை சமையல் எண்ணெயுடன் கலந்து சந்தைப்படுத்துவது நாடெங்கிலும் உள்ளது.

கலப்படமில்லாத ஜவ்வரிசி இல்லை. நாட்டுச் சா்க்கரையுடன் நிலத்துக்குப் போடப்படும் ரசாயன உரங்களைக் கலப்பது நடைபெறுகிறது. மா, வாழை, சப்போட்டா போன்ற பழங்கள் ரசாயனம் வைத்தே பழுக்க வைக்கப்படுகின்றன.

கலப்படம் செய்வோா், அதற்குத் துணை நிற்பவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களின் ஏற்றுமதி உயரும். மாறாக உணவுப் பொருள்களைத் தொடா்ந்து இறக்குமதி செய்து வருவது ஒரு தேசிய அவமானமாகும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT