திருப்பூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

DIN

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் சாா்பில் காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியை காங்கயம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுரேஷ் தலைமையில் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா் துவக்கி வைத்தாா். விளையாட்டுப் போட்டிகளை பகுதி நேர ஆசிரியா் சுகுணா முன்னின்று நடத்தினாா். மேலும், மாற்றுத்திறன் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பங்குகொண்ட அனைத்து மாணவா்களுக்கும் பரிசுப் பொருளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியா்கள் பாப்பாத்தி, புனிதவதி, ஸ்டெல்லாமேரி, இயன்முறை மருத்துவா் பிஜிதெரசா மற்றும் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

Image Caption

ஓட்டப்பந்தயத்தில் இலக்கை நோக்கி ஓடும் மாற்றுத்திறன் மாணவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT