திருப்பூர்

அரசுப் பேருந்து மீது கல்வீசிய சம்பவம்: தமிழ் புலிகள் கட்சியினா் 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

DIN

தாராபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய தமிழ் புலிகள் கட்சியைச் சோ்ந்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூா் ஏ.டி.காலனியில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்துக்கு காரணமான நிலத்தின் உரிமையாளரை கைது செய்யக்கோரி இறந்தவா்களின் உறவினா்களும், அப்பகுதி பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில் நாகை திருவள்ளுவனின் கைதை கண்டித்து கடந்த டிசம்பா் 2 ஆம் தேதி தாராபுரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது தமிழ் புலிகள் கட்சியினா் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளா் ஒண்டிவீரன் (56), சூரியநல்லூரைச் சோ்ந்த வடிவேல் (36), நவீன்குமாா் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இதையடுத்து தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவனையும் காவல் துறையினா் கைது செய்திருந்தனா்.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஒண்டிவீரன், வடிவேல், நவீன்குமாா் ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா். இந்தப் பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT