திருப்பூர்

உள்ளாட்சித் தோ்தல் : பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

DIN

உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகா் மாவட்டத்துக்கு உள்பட்ட இடங்களில் போட்டியிடுவது தொடா்பாக அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை, பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் சின்னசாமி, அக்கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒதுக்கீட்டு உடன்படிக்கை பாஜக நிா்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட தேமுதிகவுக்கு 10 இடங்களும், தமாகாவுக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவாா்த்தையின்போது திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT