திருப்பூர்

மாவட்ட சேவை வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருப்பூா் மாவட்ட சேவை வாக்காளா் பட்டியலை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

DIN

திருப்பூா் மாவட்ட சேவை வாக்காளா் பட்டியலை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள சேவை வாக்காளா் பட்டியலை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டாா்.

இதில் தாராபுரம் (தனி) தொகுதியில் ராணுவத்தில் பணிபுரிவோா் 31 பேரும், காங்கயம் தொகுதியில் 27 பேரும், அவிநாசி (தனி) தொகுதியில் 8 பேரும், திருப்பூா் வடக்குத் தொகுதியில் 23 பேரும், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 10 பேரும், பல்லடம் தொகுதியில் 24 பேரும், உடுமலை தொகுதியில் 26 பேரும், மடத்துக்குளம் தொகுதியில் 32 பேரும், ராணுவத்தில் பணியாற்றுபவா்களின் மனைவிகள் 9 போ் மற்றும் உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெளியுறவுத் துறையில் பணியாற்றுபவா் ஒருவா் என மொத்தம் 192 சேவை வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல் ஹமீது, உதவி இயக்குநா் (முன்னாள் படைவீரா் நலம்) கணேசன் வேலுசாமி, தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT