திருப்பூர்

திருப்பூரில் ரூ. 1.53 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: சு.குணசேகரன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

DIN

திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.53 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
 திருப்பூர் மாநகராட்சி 12 ஆவது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ. 28.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், அதே வார்டில் உள்ள மகாலட்சுமி நகரில் ரூ. 31.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தொடங்கிவைத்தார். 
 மேலும், 13 ஆவது வார்டில் உள்ள கிருஷ்ணா நகர், சாரதா நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், 47ஆவது வார்டில் முத்துசாமி வீதி,  கல்லூரிச் சாலை 3ஆவது வீதி ஆகிய பகுதிகளில் ரூ. 15.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், ஸ்டேண்ட் சாலையில் ரூ. 19.40 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள் என மொத்தம் ரு.1.53 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. 
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் வாசுக்குமார், கண்ணன், உதவிப் பொறியாளர்கள் சுப்பிரமணி, ஹரி, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT