"வாசிப்பை நேசிப்போம்'
உடுமலை உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள இரண்டாம் கிளை நூலகத்தில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் வாசிக்கும் திறனை
உடுமலை: உடுமலை உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள இரண்டாம் கிளை நூலகத்தில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாரம் ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொது அறிவுக் கதைகள், படக் கதை, சிறுகதை நூல்கள் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாசித்தனர். நூலகர் கணேசன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.