திருப்பூர்

அத்திக்கடவு திட்டப் போராட்டக் குழுவினர் மீதான வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தல்

DIN


அவிநாசி: போராட்டக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற முதல்வரிடம் வலியுறுத்துவது என அத்திக்கடவு போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
அத்திக்கடவுத் திட்டப் போராட்டக் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, இத்திட்டப் பணியை அவிநாசியில் துவக்கிவைக்க வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அடிக்கல் நாட்டு விழாவில் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் திரளாகப் பங்கேற்பது, இதற்கான போராட்டத்தின்போது  போராட்டக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற முதல்வரிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT