உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையிட்டனர். மத்திய பேருந்து நிலையம், பழனிப் பாதை, கல்பனா திரையரங்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்பளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 75 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.