திருப்பூர்

பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட 3 பேர் கைது

DIN


திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளரைக் கத்தியால் குத்தி செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 
திருப்பூர், மண்ணரை பகுதியைச் சேர்ந்தவர் சி.ரமேஷ் (30). இவர் அதே பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இரு சக்கர வாகனத்தில் பி.என்.சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வந்து கொண்டிருந்தார். சிட்கோ பேப்ரிகேஷன் பாலம் அருகே வந்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ரமேஷை வழிமறித்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து ரமேஷை கத்தியால் குத்தி அவரது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனர். இதில், காயமடைந்த ரமேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், வடக்கு காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கல்லூரி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த 3 பேரும் ரமேஷைக் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சூசையாபுரத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (19), காதர் பாட்ஷா (19), பெத்திரெட்டிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT