திருப்பூர்

உணவு பாதுகாப்புத் திட்டத்தில் தற்காலிகப் பணி: ஆட்சியர் அறிவிப்பு

DIN

உணவுப் பாதுகாப்புத் திட்டப் பணிகளுக்கு தற்காலிக- ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஆலோசகர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு முகவர்கள் அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப்  பணிகளுக்கு தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஆலோசகர் பணியிடத்தை வேலைவாய்ப்பு முகமை (ஏஜென்சி) மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பணியாளர்களைத் தேர்வு செய்ய பதிவுத் துறை மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு முகமைகள் தங்கள் விபரங்களை  ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தளம் எண்-5, அறை எண்- 529, திருப்பூர் - 641 604 முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
இதில், தேர்வு செய்யப்படும் வேலைவாய்ப்பு முகமை உடனடியாக பணியாளரைத் தேர்வு செய்து வழங்க வேண்டும். 
இதுகுறித்த இதர விபரங்களைத் தெரிந்துகொள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (வேளாண்மை)  தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT