திருப்பூர்

அரசு உண்டு உறைவிடப் பள்ளி ஆண்டு விழா

DIN


திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியின் 12 -ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குண்டடத்தை அடுத்துள்ள தேர்ப்பாதை தொண்டாமுத்தூரில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியின் 12-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் கணேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் நிர்வாகத் திட்ட அலுவலர் தூயவன் வரவேற்றார். தலைமையாசிரியர் கலைவாணி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தாராபுரம் துணை ஆட்சியர் பவன்குமார் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 
விழா இறுதியில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிறைவில் பள்ளி ஆசிரியை கலாமணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT